ராமர் சேது பிரச்னையில் நீதித்துறையை நம்புகிறோம் : மடாதிபதிகள் அறிவிப்பு
|
சென்னை: "ராம சேது விஷயத்தில் நீதித்துறையை நம்புகிறோம் , அரசியல்வாதிகளை அல்ல" என இந்து மடாதிபதிகள்- துறவியர் பேரவை அறிவித் துள்ளது. தென் மாநிலங்களைச் சேர்ந்த இந்து மடாதிபதிகள், துறவியர், இந்து சமய சான்றோர்கள் பங்கேற்ற மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. மாநாடு குறித்து ஹரித்துவார் மடாதிபதி ஹன்ஸ்தாஸ்ஜி மகராஜ், பெஷாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த மகராஜ், ஷ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள், பேரூர் மருதாசல அடிகளார், வி.எச்.பி., அகில உலக செயல் தலைவர் வேதாந்தம், பொதுச் செயலர் பிரவீண் தொகாடியா, ராம சேது பாதுகாப்புக் குழு ஆலோசகர் கல்யாணராமன் ஆகியோர் கூறியதாவது: சேது சமுத்திர வழித்தட மாற்றுப் பாதை, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஆகியவைகள் குறித்து ஒரு குழு அமைத்து ஆராய்வதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசுக்கு சாதகமான கருத்தை தெரிவிப் பவர்களைக் கொண்ட ஒருதலைப்பட்சமான குழு தற்போது அமைக்கப் பட்டுள்ளது. இந்த குழு அறிக்கை சமர்பிப்பதற்கு முன்பே மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, `ராமர் பாலம் அமைந்துள்ள இடத்திலே தான் சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைப் படுத்துவேன்' என திரும்ப திரும்ப கூறி வருவது சுப்ரீம் கோர்ட்டிற்கு மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை மீறுவதாக உள்ளது. அமைச்சரின் இத்தகைய கருத்து மத்திய அரசின் குழுவை மறைமுகமாக அச்சுறுத்துவதாக உள்ளது. ராமர் பாலத்தை பாதுகாக்கும் போராட்டத்தின் அடுத்த கட்டமாக நவம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை நாடு முழுவதும் `ராம சேது ஷிலா' ரத யாத்திரை நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும், கிராமங்களிலும் ராமர் பாலத்திலிருந்து எடுத்து வரப்பட்ட மிதக்கும் கல்லுடன் விழிப்புணர்வு ரத யாத்திரை நடக்கும்; மடாதிபதிகளும், துறவியர்களும் பங்கேற்பர். ராம சேதுவை பாதுகாக்க டில்லி போட் கிளப் மைதானத்தில் டிசம்பர் 30ம் தேதி மாபெரும் பேரணி நடைபெறும். இந்து நம்பிக்கைகளை காயப்படுத்துவதை மத்திய அரசு நிறுத்திக் கொண்டு ராம சேதுவை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்; இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ராம சேதுவை பாதுகாத்தால் சுற்றுச்சூழல், மீனவர் நலன் பாதுகாக்கப்படும். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார வளம் குறித்து அரசு விரிவான விளக்கத்தை வெளியிட வேண்டும். ராம சேது பிரச்னையில் நீதித்துறையை நம்புகிறோம். அரசியல்வாதிகளை நம்பத் தயாராயில்லை. எந்த கட்சி, ஆட்சியில் இருந்து ராமர் பாலத்தை இடிக்க முனைந் தாலும் அதை எதிர்த்து போராடுவோம். ராம சேதுவை காக்க அனைத்து கட்சி எம்.பி.,க்களிடமும் ஆதரவு கேட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். விவாதத்திற்கு தயார் : ராமர் குறித்தும், ராமாயணம் குறித்தும் முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய பெஷாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த மகராஜ், `முதல்வர் கருணாநிதி, ராமர் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்துக்களை காயப் படுத்தியுள்ளது. ராமர் குறித்தோ, வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் எழுதிய ராமாயணங்கள் குறித்தோ கருணாநிதியுடன் பொதுவிவாதம் நடத்த தயாராக உள்ளேன்' என்றார். |
No comments:
Post a Comment